ஏழை பெண்களுக்கு இலவச சேலை
ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.
நெல்லை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு, ஏழை பெண்களுக்கு சேலை மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகளை வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்.
மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மாநில வக்கீல் அணி இணை தலைவர் வக்கீல் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளையில் நடந்த நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமை தாங்கி, இனிப்பு வழங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் அல்பர்ட், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் குமார், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் விஜயபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.