பெண்களுக்கு இலவச சேலை
சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி பெண்களுக்கு இலவச சேலைகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இட்டமொழி:
சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி பெண்களுக்கு இலவச சேலைகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
சோனியா காந்தி பிறந்த நாள்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவடி விஜய மஹாலில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., 500 பெண்களுக்கு இலவசமாக சேலைகள் வழங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர்கள் சந்திரசேகர், செல்லப்பாண்டி, பஞ்சாயத்து தலைவர் மாவடி ரமேஷ், தி.மு.க. நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேரன்மாதேவி
இதேபோல் சேரன்மாதேவி வட்டார காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சார்பில், சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வட்டார தலைவர் ராமச்சந்திரன் தலைமையில், புதுக்குடி கிராமத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் சேரன்மாதேவி நகர காங்கிரஸ் தலைவர் பொன்ராஜ், கவுன்சிலர் ஆனி, புதுக்குடி மகளிர் அணி தலைவி வேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.