15 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்


15 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்
x

கூந்தன்குளத்தில் 15 பெண்களுக்கு இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்

திருநெல்வேலி

இட்டமொழி:

நெல்லை மாவட்டம் கூந்தன்குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு வனத்துறை சார்பில் அப்பகுதியில் வசிக்கும் ஏழை பெண்கள் சுய தொழில் செய்ய வசதியாக இலவச தையல் எந்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் பகுதியில் வசிக்கும் 15 பேருக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தையல் எந்திரங்களை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் முருகன், சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை வனச்சரகர் சரவணன், வனவர் அழகர்ராஜ், வனக்காவலர்கள் மணிகண்டன், தேவஆசீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரெட்டியார்பட்டி, இட்டேரி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஈட்டி, செம்மரம், தேக்கு போன்ற 700 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நட்டு வைத்தார். மாவட்ட வன அலுவலர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story