இலவச சித்த மருத்துவ முகாம்
நெமிலியில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.
ராணிப்பேட்டை
நெமிலி
நெமிலியில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.
நெமிலி பேரூராட்சி, பொன்னியம்மன் கோவில் வளாகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. நெமிலி அரிமா சங்கம் மற்றும் புன்னை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய முகாமுக்கு அரிமா சங்க தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். அரசு சித்த மருத்துவர் பூங்குழலி வரவேற்றார்.
முகாமில் சர்க்கரை நோய், வாத நோய்கள், கை கால் வலி, ரத்த சோகை, காய்ச்சல், இருமல், தோல் நோய்கள், மூலம், பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள், குழந்தைகள் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கப்பட்டது. மேலும் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. முடிவில் செயலாளர் கிருஷ்ணன் நன்றி வழங்கினார்.
Related Tags :
Next Story