இலவச தோல் நோய் சிகிச்சை முகாம்
இலவச தோல் நோய் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கரூர்
பள்ளப்பட்டியில் இலவச தோல் நோய் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் குமரன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுசல்யா முன்னிலை வகித்தார். முகாமை திருச்சி மருத்துவப்பணிகள் (தொழுநோய்) துணை இயக்குனர் டாக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். தோல் நோய் சிகிச்சை டாக்டர்கள் பிரீத்தி, மோகனவள்ளி ஆகியோர் பொதுமக்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி, கரூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க முன்னாள் தலைவர் பாப்புலர் அபுத்தாஹிர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story