கூட்டாம்புளியில்இலவச தோல் நோய் சிகிச்சை முகாம்
கூட்டாம்புளியில்இலவச தோல் நோய் சிகிச்சை முகாம் நடந்தது.
தூத்துக்குடி
புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச தோல்நோய் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமுக்கு தூத்துக்குடி மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய்) யமுனா தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார். முகாமில் கூட்டாம்புளி மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
முகாமில் நலக்கல்வியாளர்கள் முத்துக்குமார், அந்தோணிசாமி, வட்டார சுகாதார மேற்பார்வைாளர் ஆறுமுகநயினார், சுகாதார ஆய்வாளர்கள் மந்திரமூர்த்தி, இளங்கோவன், காமாட்சி, பிபின் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மதிவாணன், சுகாதார ஆய்வாளர் சுசிமகேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story