போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி

திருப்பூர்

திருப்பூர்

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 621 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுடன் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையின் 129 காலிப்பணியிடங்களும் சேர்க்கப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு வருகிற 1-ந் தேதி முதல் www.tnusrb.tn.gov.inஎன்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் மாதம் 30-ந் தேதி கடைசிநாள்.

இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் வருகிற 30-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்படும். மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இலவச பயிற்சியில் பங்கேற்க தங்கள் பெயரை முன்பதிவு செய்ய திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, 0421 2999152 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

-------------


Next Story