வேலைவாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு
எஸ்.எஸ்.சி.யின் 7 ஆயிரத்து 500 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வௌியாகி உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடக்கிறது.
திருவாரூர்;
எஸ்.எஸ்.சி.யின் 7 ஆயிரத்து 500 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வௌியாகி உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடக்கிறது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு தொடர்பான 7 ஆயிரத்து 500 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கான விவரம், வயது வரம்பு, தேவையான கல்வி தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வு திட்டம் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் ssc.nic.in/SSCFileserver/PortalManagement/uploadfiles/noticeCGLE030 42023.pdf என்ற இணையதள முகவரியிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கான தேர்விற்கு www.ssc.nic.in என்ற இணையத்தில் அடுத்த மாதம் 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
7 இடங்களில் தேர்வு
கட்டணம் செலுத்த 4-ந் தேதி கடைசி நாளாகும். தேர்வு ஜூலை மாதம் தமிழ்நாட்டில் 7 இடங்களில் நடக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வு போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
பயிற்சி வகுப்புகள்
தேர்வுக்கான பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையின் Tamilnaducareerservices.tn.gov.inஎன்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த இணையதளத்தில் TN carrer services empolyment மற்றும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் AIM TN என்ற யுடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொலிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.எனவே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.