சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி
கீழக்கரையில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகளை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
கீழக்கரை,
கீழக்கரையில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகளை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இலவச தள்ளுவண்டிகள்
தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தில் கீழக்கரையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 15 தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டிருந்தன. தற்போது 5 வண்டிகள் மட்டும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கீழக்கரையில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகளை வழங்கினார். அதையொட்டி புதிய ஜெட்டி பாலத்தில் அமைந்துள்ள உயர் கோபுர மின் விளக்கை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து மற்றும் 1-வது மற்றும் 7-வது வார்டுகளில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காக்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார்.
மேலும் 5-வது வார்டு முத்துச்சாமிபுரத்தில் உள்ள குடிநீர் குழாய்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.25 லட்சம் மதிப்பில் அமைய உள்ள சமுதாயக் கூடத்தின் இடத்தையும் ஆய்வு செய்தார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், பொறியாளர் அருண், துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, ராமநாதபுரம் நகராட்சி துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், வடக்கு தெரு ஜமாஅத் தலைவர் ரெத்தின முஹம்மது, கவுன்சிலர்கள் முகமது பாதுஷா, மீரான் அலி, நசீருதீன், சுஐபு, நவாஸ், பாஸ்தீன் மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுபியான், நயீம், மற்றும் மூர் ஹசனுதீன், ஜெய்னுதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.