டி.எல்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியில் சுதந்திர ஓட்டம்
டி.எல்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியில் சுதந்திர ஓட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழா நிறைவை முன்னிட்டும், மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் 147-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டும் சுதந்திர ஓட்டம் நடைபெற்றது.
கல்லூரி தலைவர் ஏ.எல்.ரவி, தாளாளர் பி.கோமதி ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் டி.கவுதமன், பி.நிர்மலா ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
மாணவர்கள் கல்லூரியிலும், கல்லூரிக்கு வெளியிலும் சுத்தம் செய்தனர். தேசிய மாணவர் படை மாணவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story