ரெயில்வே பாதுகாப்பு படை நடத்திய சுதந்திர ஒற்றுமை ஓட்டம்


ரெயில்வே பாதுகாப்பு படை நடத்திய சுதந்திர ஒற்றுமை ஓட்டம்
x

திருவண்ணாமலையில் ரெயில்வே பாதுகாப்பு படை நடத்திய சுதந்திர ஒற்றுமை ஓட்டம்

திருவண்ணாமலை

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை முதன்மை கோட்டை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சவரிமுத்து மற்றும் திருவண்ணாமலை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பங்கேற்ற "சுதந்திர ஒற்றுமை ஓட்டம்" இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை திருவண்ணாமலை ரெயில்வே மண்டல மருத்துவ அலுவலர் ராஜ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை ரெயில்வே நிலைய கண்காணிப்பாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதில் ரெயில்வே ஊழியர்கள் பங்கேற்றனர்.

சுதந்திர ஒற்றுமை ஓட்டம் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் தொடங்கி சின்ன கடை வீதி வழியாக பெரியார் சிலை, நீதிபதிகள் குடியிருப்பு, திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையம் வழியாக திண்டிவனம் செல்லும் மெயின் ரோடு வழியாக சென்று மீண்டும் திருவண்ணாமலை ரெயில் நிலையம் வந்தடைந்தது.


Next Story