மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ரெயில் மோதி ஊழியர் பலி


மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ரெயில் மோதி ஊழியர் பலி
x

அரக்கோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ரெயில் மோதி ஊழியர் பலியானார்

ராணிப்பேட்டை

திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காடு அடுத்த அரிச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 36), ரெயில்வேயில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் பாலகிருஷ்ணன் (35). நேற்று முன்தினம் இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் திருவாலாங்காடு ரெயில் நிலையம் அருகே வந்த போது அங்கிருந்த ரெயில்வே கேட்டை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரெயில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் வேலாயுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வேலாயுதம் உடலை பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story