மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி விபத்து - பெண் பலி


மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி விபத்து - பெண் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு


ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி.இவரது மனைவி தங்கமணி(வயது60). இவரது உறவினர் கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி சாமி (75).

இந்நிலையில் நேற்று இரவு தங்கமணி,சுப்பிரமணி சாமி ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் அத்தாணி- சத்தியமங்கலம் மெயின் சாலையில் டி.என்.பாளையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு மெயின் சாலையை இடது புறம் கவனிக்காமல் கடக்க முயன்றதாக கூறப்படுகிறது

அப்போது சேலம் சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த தங்கமணி வேனில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அருகில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பங்களாப்புதூர் போலீசார் தங்கமணியின் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் விபத்து குறித்து சரக்கு வேன் டிரைவர் பிரதீப்பை கைது செய்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் இதுபோன்ற வாகன விபத்து அடிக்கடி நடைபெறுகிறது. அதே போல் விபத்து நடந்த இடத்தில் முதலுதவி செய்ய முன்வராத சிலர் போட்டோ வீடியோ எடுப்பதிலேயே மும்மரமாக இருந்ததாக போலீசார் வருத்தத்துடன் தெரிவித்தனர்.


Next Story