பலத்த காற்றின் காரணமாக அரியலூரில் அடிக்கடி மின்தடை


பலத்த காற்றின் காரணமாக அரியலூரில் அடிக்கடி மின்தடை
x

பலத்த காற்றின் காரணமாக அரியலூரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் நகரில் கடந்த ஒரு வாரமாக காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால் மழை பெய்வதற்கான கருமேகங்கள் சூழ்ந்தாலும் அளவுக்கு அதிகமான காற்றால் அவைகள் கலைந்து போகின்றன. வழக்கமாக ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். ஆடி காற்றில் அம்மியே பறக்கின்றது என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதம் பிறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே பலத்த காற்று வீசுகிறது. இதனால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. காற்றில் மணல் கலந்து வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சாலையோரத்தில் உள்ள உணவு விற்கும் கடைகளில் அதிகமான காற்றால் பொருட்கள் தூக்கி வீசப்படுகிறது. குப்பை தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகளை காற்று பல கிலோமீட்டர் தூரத்திற்கு அடித்து செல்கிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்ற மிகவும் சிரமப்படுகின்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் ஆடி மாதத்தில் பருவத்திற்கு மழை பெய்து மானாவாரி பயிர்கள் விதைப்பதற்கு முடியுமா? என்று விவசாயிகள் கவலையோடு இருக்கின்றனர்.


Next Story