வாலிபர் கொலையில் நண்பர் கைது


வாலிபர் கொலையில் நண்பர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் வீடு புகுந்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வீடு புகுந்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.

வாலிபர் படுகொலை

ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் என்பவரின் மகன் பக்கா என்ற பிரபுதேவா (வயது 28). தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் முருகேஸ்வரி (48) பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் மீது பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் வழக்கம்போல முருகேஸ்வரி தங்கை வீட்டிற்கு சென்றுவிட்டு காலைநேரத்தில் வீட்டிற்கு பால் வாங்கிக்கொண்டு வந்துள்ளார். மகனுக்கு டீ போட்டு கொடுப்பதற்காக சென்றபோது மயங்கிய நிலையில் காதில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் இருந்த மகனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்து பார்த்தபோது தலையில் படுகாயம் இருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் பஜார் போலீசார் விரைந்து வந்து இறந்து கிடந்த அவரது உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.

நண்பர் கைது

போலீசாரின் விசாரணையில் பிரபுதேவாவின் நண்பரான அதேபகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் நாகராஜ் (22) என்பவர்தான் இந்த கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் பதுங்கியிருந்த நாகராஜை நேற்று காலை கைது செய்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக பிரபுதேவாவை ெகாலை செய்ததாக நாகராஜ் போலீசில் தெரிவித்தார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story