"ஒரு பிள்ளையை காப்பாற்றுவதற்குள்ள இன்னோரு பிள்ள உள்ள போயிடுச்சிங்க" மாணவிகளை உயிரை கொடுத்து காப்பாற்றிய தோழி உருக்கம்...!


ஒரு பிள்ளையை காப்பாற்றுவதற்குள்ள இன்னோரு பிள்ள உள்ள போயிடுச்சிங்க மாணவிகளை உயிரை கொடுத்து காப்பாற்றிய தோழி உருக்கம்...!
x

கரூரில் பள்ளி மாணவிகள் 4 பேர் ஆற்றில் முழ்கி உயிரிழந்த சம்பவத்தில், 3 மாணவிகளின் உயிரை காப்பாற்றிய பள்ளி மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 13 பேர் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு திரும்பியுள்ளனர். அப்போது, கரூர் மாவட்டம் மாயனூர் அணையை சுற்றி பார்க்க இறங்கிய மாணவிகள், மாயனூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில், 4 மாணவிகள் எதிர்பாரதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மாணவிகள் சிலர் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி தவித்த போது, 3 மாணவிகளை சக மாணவியான கீர்த்தனா என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியதாக கூறப்படுகிறது. இந்த துயர சம்பவத்தில், துணிச்சலாக செயல்பட்டு 3 மாணவிகளை மீட்ட வீரமங்கை கீர்த்தனாவின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story