ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பொதுமக்கள் வீடுகளில் தேசிய கொடியேற்ற வேண்டும்


ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பொதுமக்கள் வீடுகளில்  தேசிய கொடியேற்ற வேண்டும்
x

ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பொதுமக்கள் வீடுகளில் தேசிய கொடியேற்ற வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகளில் தேசிய கொடியேற்ற வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்கள், நினைவகங்கள், மணிமண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் அனைவரும் தேசிய கொடி ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழிப்புணர்வு

கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், நினைவகங்கள், மணிமண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் அனைவரும் தேசிய கொடி ஏற்ற வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். சுதந்திர உணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரி, கலை பண்பாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு கலைக் குழுக்கள் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story