ஆந்திராவில் இருந்து ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணி திடீர் சாவு


ஆந்திராவில் இருந்து   ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணி திடீர் சாவு
x

ஆந்திராவில் இருந்து ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணி மயங்கி விழுந்து இறந்தார்.

நீலகிரி

ஊட்டி

ஆந்திராவில் இருந்து ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணி மயங்கி விழுந்து இறந்தார்.

சுற்றுலா வந்தனர்

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் நாகராஜ் (வயது 23). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நாகராஜ் தனது நண்பர்கள் 2 பேருடன் நேற்று காலை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க வந்தார். இந்த நிலையில் காலையில் ஊட்டிக்கு வந்த அவர்கள் தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அப்போது நெஞ்சு வலிப்பது போல் உள்ளது என்று கூறினார். இதைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் 3 பேரும் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பினர்.

மயங்கி விழுந்தார்

இந்த நிலையில் நாகராஜ் அங்கு மயங்கி விழுந்தார். உடனடியாக அவருடைய நண்பர்கள் அவரை ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நாகராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதன் பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து ஊட்டி மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story