சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு அரசு டவுன் பஸ்சை உரிய நேரத்தில் இயக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை


சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு அரசு டவுன் பஸ்சை உரிய நேரத்தில் இயக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Jun 2023 3:24 AM IST (Updated: 15 Jun 2023 12:18 PM IST)
t-max-icont-min-icon

சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சை உரிய நேரத்தில் இயக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சை உரிய நேரத்தில் இயக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிலாளர்கள்

சென்னிமலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நிறுவனங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வேலை முடிந்து வெவ்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக சென்னிமலை பஸ் நிலையத்துக்கு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தினமும் சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து மாலை 6.40 மணிக்கு சி-13 என்ற வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ் பெருந்துறைக்கு இயக்கப்பட்டு வந்தது.

இதனால் இந்த அரசு டவுன் பஸ்சை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் சமீப காலமாக இந்த பஸ் முன் கூட்டியே அதாவது 6.20 மணிக்கே சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து பெருந்துறைக்கு புறப்பட்டு சென்று விடுகிறது.

நடவடிக்கை

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், சி-13 என்ற வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ் தினமும் மாலையில் 6.40 மணிக்கு சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். இதனால் நாங்கள் இந்த அரசு டவுன்பஸ்சை பயன்படுத்தி வந்தோம். மேலும் வேலை முடிந்து வரும் தொழிலாளர்களுக்கு வசதியாக இருந்தது.

ஆனால் இந்த பஸ் சமீப காலமாக 20 நிமிடம் முன்கூட்டியே புறப்பட்டு சென்று விடுகிறது. இதனால் நாங்கள் பெரிதும் சிரமப்படுகிறோம். இதன் காரணமாக காத்திருந்து வேறு பஸ்சில் சென்றால் வீட்டிற்கு செல்வதற்கே வெகுநேரமாகிறது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்தின் காங்கேயம் கிளை மேலாளர் மற்றும் ஈரோடு மேலாளருக்கு புகார் கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் அரசு டவுன் பஸ்சை உரிய நேரத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்


Related Tags :
Next Story