கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்திலிருந்துதிட்டங்குளம் தினசரி சந்தைக்குபஸ்வசதி தேவை:வியாபாரிகள் சங்க பேரவை கோரிக்கை


கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்திலிருந்துதிட்டங்குளம் தினசரி சந்தைக்குபஸ்வசதி தேவை:வியாபாரிகள் சங்க பேரவை கோரிக்கை
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:45 PM GMT)

கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்திலிருந்து திட்டங்குளம் தினசரி சந்தைக்கு பஸ்வசதி செய்துதரவேண்டும் என்று வியாபாரிகள் சங்க பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள திட்டங்குளம் தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை வடக்கு மாவட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்டதலைவர் நாஞ்சில் குமார் தலைமை தாங்கினார். தினசரி சந்தை தலைவர் அழகுராஜா என்ற பன்னீர்செல்வம், பொருளாளர் சின்ன மாடசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் அரிகிருஷ்ணன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து திட்டங்குளம் தினசரி சந்தைக்கு மாவட்ட நிர்வாகம் பஸ் வசதி செய்து தரவேண்டும். விளாத்திகுளம், தூத்துக்குடி மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் திட்டங்குளம் தினசரி சந்தையில் நின்று செல்லும் வகையில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.


Next Story