திருச்செந்தூரில் இருந்து ஜனாதிபதிக்கு இந்து முன்னணியினர் மனு


திருச்செந்தூரில் இருந்து  ஜனாதிபதிக்கு இந்து முன்னணியினர் மனு
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:16:09+05:30)

திருச்செந்தூரில் இருந்து ஜனாதிபதிக்கு இந்து முன்னணியினர் கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

இந்துக்களை இழிவாக பேசிய ஆ.ராசாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கக்கோரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் 115 மனுக்கள் திருச்செந்தூர் தபால் நிலையத்தில் இருந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. இதில், இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் கசமுத்து, திருச்செந்தூர் நகர பொதுச் செயலாளர் முத்துராஜ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜீ, ஆறுமுகநேரி நகர துணை தலைவர் பொன்ராஜ் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story