புதன்கிழமை முதல் முதல் 6-ந் தேதி வரை திருச்செந்தூர் கோவிலில் தங்கத்தேர் பவனி ரத்து


புதன்கிழமை முதல் முதல் 6-ந் தேதி வரை திருச்செந்தூர் கோவிலில் தங்கத்தேர் பவனி ரத்து
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதன்கிழமை முதல் முதல் 6-ந் தேதி வரை தங்கத்தேர் பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதம் திருவெம்பாவை திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா வருகிற 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

திருவிழா காலங்களில் தினமும் சுவாமி மாணிக்கவாசகர் புறப்பாடு நடக்கின்றது. இதனால் இன்று முதல் வருகிற 6-ந் தேதி வரை கோவிலில் தங்கத்தேர் பவனி ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story