மாயாண்டி சுவாமி கோவிலில் பழம் படைத்தல் திருவிழா


மாயாண்டி சுவாமி கோவிலில் பழம் படைத்தல் திருவிழா
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே மாயாண்டி சுவாமி கோவிலில் பழம் படைத்தல் திருவிழா நடைபெற்றது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டியில் மாயாண்டி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும். பின்னர் இந்த கோவிலின் சிறப்பு திருவிழாவாக பழம் படைத்தல் விழா, மார்கழி மாதம் 2-வது வெள்ளிக்கிழமை அன்று தொன்று தொட்டு நடைபெற்று வருவது வழக்கம்.

அதன்படி இந்த பழம் படைத்தல் சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அந்த ஊரில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வாழைப்பழ முழு தார்களை கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு படைத்தனர். மேலும் அனைவரும் சுவாமிக்கு வரிசையில் நின்று மாலை சாத்தி வழிபட்டனர். பின்னர் சுவாமிக்கு படைக்கப்பட்ட அந்த பழங்களை பக்தர்கள் மீண்டும் பிரசாதமாக வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அனைவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக் கிழமைதோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.


Next Story