அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை முகாம்
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை முகாம் நடந்தது.
கரூர்,
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று கூட்டுறவுத்துறை மற்றும் மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை இணைந்து அனைத்து பொதுவினியோகத்திட்ட ரேஷன் கடையில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்காக நடத்தப்படும் முழு உடல் பரிசோதனை சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:- கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதற்கான முகாம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இம்முகாம் நியாய விலைக்கடையில் பணிபுரியும் 298 விற்பனையாளர்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 30 பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முழு உடல் பரிசோதனை முகாமில் காது, மூக்கு, தொண்டை, கண்பார்வை பரிசோதனை, பற்கள் பரிசோதனை மற்றும் இதயதுடிப்பு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன, என்றார். பின்னர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நவீன உபகரணங்களுடன் கூடிய ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையத்தினை பார்வையிட்டார்.