வனதுர்க்கை அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை


வனதுர்க்கை அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
x

வேதாரண்யம் வனதுர்க்கை அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ளது வனதுர்க்கை அம்மன் கோவில். இந்த கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெற்றது. புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதேபோல் வேதாரண்யம் மாணிக்கவாசகர் மடத்தில் பவுர்ணமி வழிபாடு நடந்தது. இதில் விக்னேஸ்வரன் தலைமையில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசக பாடல்களை பாடினர். நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகர்த்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வேதாரண்யம் வேம்ப தேவன்காடு தெற்கு பகுதியில் அமைந்துள்ள மவுன சித்தர் பீடம் உள்ளிட்ட இடங்களிலும் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.


Related Tags :
Next Story