15 வருட அரசு பணியை பூர்த்தி செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஓய்வூதியம்


15 வருட அரசு பணியை பூர்த்தி செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஓய்வூதியம்
x

15 வருட அரசு பணியை பூர்த்தி செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்


விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் நலன் விரும்பும் தேசிய அமைப்பான சஷ்சம் அமைப்பின் 3-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டினை மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பல்வேறு நிர்வாகிகள் வாழ்த்திப்பேசினர். மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உதவி தொகைைய ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் சாய்தள நடைபாதை அமைக்க வேண்டும். சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும். அரசு வேலையில் ஜாதி அடிப்படையில் இல்லாமல் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளியானவர்களுக்கு வருமான வரி, தொழில் வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். 15 வருட அரசு பணியை பூர்த்தி செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சஷ்சம் அமைப்பின் மாநில இணைச்செயலாளர் முத்து மணிகண்டன் வரவேற்றார். முன்னதாக இந்நகர் தேசபந்து திடலிலிருந்து வாகன பிரசாரம் தொடங்கி மாநாடு நடைபெற்ற அரங்கினை வந்தடைந்தது.



Next Story