காணும் பொங்கலையொட்டி எருது விடும் விழா கோலாகலம்


காணும் பொங்கலையொட்டி எருது விடும் விழா கோலாகலம்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

காணும் பொங்கலையொட்டி எருது விடும் விழா கோலாகலமாக நடந்தது.

எருது விடும் விழா

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காணும் பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்றது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை உழவர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் காணும் பொங்கல் விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் எருது விடும் விழா நடைபெற்றது.

ஏராளமான இளைஞர்கள் எருதுகளை விரட்டி சென்று பிடித்தனர். இதேபோன்று அன்னசாகரம் திரவுபதி அம்மன் கோவிலில் காணும் பொங்கல் விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற எருது விடும் விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு

தர்மபுரி அருகே உள்ள முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் நடைபெற்ற எருது விடும் விழாவில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு எருதை விரட்டி சென்றனர். இந்த விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தர்மபுரி அருகே கடகத்தூர் கிராமத்தில் எருது விடும் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

பாலக்கோடு திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் எருதாட்டம் நடந்தது. முன்னதாக 12 ஊர் கவுண்டர்கள் முன்னிலையில் மாடுகளுக்கு புனித நீர் தெளித்து கோ பூஜை செய்யப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். விழாவை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story