தமிழக மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்


தமிழக மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
x

தமிழக மக்களின் தேவை மற்றும் மாநில மேம்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் கூறினார்.

விருதுநகர்


தமிழக மக்களின் தேவை மற்றும் மாநில மேம்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் கூறினார்.

கலந்துரையாடல்

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

இறுதித்தேர்வுகள் நெருங்கும் நிலையில் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் அவர்களது தேர்வு பயத்தை தணிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். நானும் சென்னை செல்லும் வழியில் இந்த பள்ளி மாணவிகளுடன் பிரதமரின் உரையை கேட்டதுடன் மாணவிகளிடையே அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் பேசினேன்.

கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை நிறைவேற்ற பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் என்பது ஒரு மாநிலத்திற்கு மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் செயல்படுத்த வேண்டிய திட்டங்களாகும். அந்த வகையில் தமிழக மக்களின் தேவை மற்றும் தமிழகத்தின் மேம்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை நிறைவேற்ற வரும் நிதிநிலை அறிக்கையில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக முடங்கியிருந்த சென்னை துறைமுகச்சாலை திட்டத்தினை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். அங்கு விமான நிலையம் அமைப்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் உள்ள நிலையில் தமிழக அரசு இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்.

மத்திய அரசு சென்னை விமான நிலையத்தை விரிவாக்க வேண்டியது அவசியமென கருதுகிறது. எனவே மாநில அரசின் பரிந்துரையின் பேரில் அங்கு விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கலெக்டர் மேகநாத ரெட்டி, முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி, கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story