விராலிமலையில் கஜமுக சூரன் முருகனுடன் போரிடும் நிகழ்ச்சி
விராலிமலையில் கஜமுக சூரன் முருகனுடன் போரிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
புதுக்கோட்டை
விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ந் தேதி கணபதி ஹோமம் மற்றும் முருகன் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் நாகம், சிம்மம், பூதம், கேடயம் உள்ளிட்ட வாகனங்களில் முருகன், வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்தநிலையில் விழாவின் 4-ம் நாளான நேற்று கஜமுக சூரன் முருகனுடன் போரிடும் நிகழ்ச்சி மலை அடிவாரத்தில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கஜமுகசூரனை வதம் செய்யும் நிகழ்வை கண்டுகளித்தனர்.
Related Tags :
Next Story