நெமிலி பொன்னியம்மன் கோவிலில் கந்தசஷ்டி வழிபாடு


நெமிலி பொன்னியம்மன் கோவிலில் கந்தசஷ்டி வழிபாடு
x

நெமிலி பொன்னியம்மன் கோவிலில் கந்தசஷ்டி வழிபாடு நடைபெற்றது.

ராணிப்பேட்டை

நெமிலி ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விழா தொடங்கியது. வருகிற 31-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது. இரண்டாம் நாளான நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் நெமிலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கந்த சஷ்டியின் முதல் நாளில் குழந்தை வரம் வேண்டியும், இரண்டாம் நாளான நேற்று தீர்க மாங்கல்ய பலம் வேண்டியும் பெண்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.


Next Story