விநாயகர் சதுர்த்தி சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேப்பனப்பள்ளி அருகே சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேப்பனப்பள்ளி
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா வருகி்ற 31-ந்் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதிகளில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் மற்றும் தயார் செய்யப்பட்ட சிலைகள் பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
வேப்பனப்பள்ளி அருகே அரியனப்பள்ளியில் ½ அடி முதல் 12 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேப்பனப்பள்ளியில் இருந்து கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை மட்டுமின்றி தமிழகத்தின பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மும்முரம்
மேலும் இந்த சிலைகள் ரூ.50 ரூபாய் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்கப்பட்டு வருகிறது. விநாயகர் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு சில நாட்களே உள்ள நிலையில் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். இதை வெளியூர் மற்றும் மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதல் விலைக்கு சிலைகள் விற்பனையாகும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.