விளாத்திகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தொடங்கி வைத்த முஸ்லிம்கள்


விளாத்திகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை  தொடங்கி வைத்த முஸ்லிம்கள்
x

விளாத்திகுளத்தில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முஸ்லிம்கள் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் பகுதிகளில் 64 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக பூஜை செய்யப்பட்டு வந்தது. நேற்று விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தை மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் முஸ்லிம்கள் கலந்து கொண்டு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதை தொடர்ந்து விளாத்திகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 64 விநாயகர் சிலைகளும், கோவில்பட்டி பகுதியில் இருந்து வந்த 58 விநாயகர் சிலைகளும், ஆக மொத்தமாக 122 விநாயகர் சிலைகளும் வேம்பார் கடலில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்துக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story