சின்னவிளை கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு


சின்னவிளை கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு
x

மணவாளக்குறிச்சி சின்னவிளை கடலில் விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி சின்னவிளை கடலில் விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தியையொட்டி மணவாளக்குறிச்சி சந்திப்பு, புதுக்கடை தெரு, பம்மத்து மூலை, வடக்கன்பாகம், பிடாகை, சக்கப்பத்து, சேரமங்கலம், பெரியகுளம் சந்திப்பு ஆகிய 8 இடங்களில் வைக்கப்பட்டிருந்த 9 சிலைகளுக்கு பூஜை நடந்து வந்தது. இந்தநிலையில் 4-வது நாளான நேற்று மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலுக்கு சிலைகள் கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டது. அப்போது இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசாசோமன் தொடக்க உரையாற்றினார். டாக்டர் பாலாஜி காவி கொடியசைத்து விநாயகர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

கடலில் கரைப்பு

பின்னர் தொடர்ந்து மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கோவிலுக்கும் ஊர்வலமாக சென்று மாலையில் சந்திப்பு வந்தடைந்தது.

நிறைவு விழாவிற்கு மணவாளக்குறிச்சி இந்து முன்னணி தலைவர் வித்யாதரன் தலைமை தாங்கினார். எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. நிறைவுரையாற்றினார். தொடர்ந்து சின்னவிளை கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார், பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் ரமேஷ், மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் சிவகுமார், குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர், செந்தில்குமார், மணவாளக்குறிச்சி பேரூர் பா.ஜனதா தலைவர் லிங்கேஸ்வரன், மணவாளக்குறிச்சி பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கார்த்திகேயன், அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மணவாளக்குறிச்சி இந்து முன்னணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story