ராமேசுவரத்தில் 21 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை


ராமேசுவரத்தில் 21 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை
x

ராமேசுவரத்தில் 21 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,


நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதே போல் ராமேசுவரம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரம் பெரியகடை வீதி, மேட்டு தெரு, ராமகிருஷ்ணபுரம், சேரான் கோட்டை, எம்.ஆர்.டி.நகர், அட்டம்மாள் தெரு, இந்திரா நகர், சிவகாமி நகர் உள்ளிட்ட 21 இடங்களில் இந்து முன்னணி சார்பில் சுமார் 3 அடி முதல் 9 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டன. இந்த பூஜையில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, நகர் தலைவர் நம்புராஜன், நகர் பொதுச் செயலாளர் கார்த்திக், நகர் செயலாளர் பாலையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ராமேசுவரத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று நகரின் முக்கிய சாலை மற்றும் கோவில் ரதவீதி சாலைகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அக்னி தீர்த்தக் கடலில் கரைக்கப்பட உள்ளன.Next Story