விநாயகர் சிலைகள் ஊர்வலம்


விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

திருப்பத்தூர், சிங்கம்புணரியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர், சிங்கம்புணரியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

விநாயகர் சதுர்த்தி

திருப்பத்தூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி முன்னாள் செயலர் ராமேஸ்வரன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாண்டி முன்னிலை வகித்தார். பா.ஜ.க. கலை மற்றும் கலாசார பிரிவு மாவட்ட தலைவர் சேதுசிவராமன் சிறப்புரையாற்றினார். திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணிநாராயணன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து 15-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சீரணி அரங்கத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சங்கிலியான் கோவில் அருகேயுள்ள குளத்தில் கரைக்கப்பட்டன.

இதில் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் கண்ணன், ஒன்றிய தலைவர் மணிகண்டன், நகர தலைவர் மணிமாறன், பா.ஜ.க. ஒன்றிய தலைவர் கே.எஸ்.தங்கபாண்டி, எம்.சரவணன், வி.ஆர்.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதே போல எஸ்.புதூர் அருகே உள்ள புழுதிபட்டி சத்திரம், பிரான்பட்டி ஆகிய கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அப்பகுதிகளில் உள்ள ஊருணியில் கரைக்கப்பட்டது. இதில் எஸ்.புதூர் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். சந்திரசேகரன், பா.ஜனதா ஒன்றிய தலைவர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி

சிங்கம்புணரியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி அன்று 41 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இந்து சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிராம அம்பலம் சத்தியசீலன் தலைமை தாங்கினார். பாண்டியன், கணேசன் சிவாச்சாரியார், கூத்தாடி அம்மன் உறவின்முறை தலைவர் செல்வம், கோசவா சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரித்திங்கரா கோவில் ஐயப்ப சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். இந்து முன்னணி மாநில செயலாளர் அண்ணாதுரை சிறப்புரை வழங்கினார். விழா குழு தலைவர் தினேஷ் பொன்னையா, செயலாளர்கள் கண்ணையா, வானவன் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய தலைவர் குகன், ராமேசுவர கோட்டம் இணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் இந்து முன்னணியினர், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


பின்னர் விநாயகர் சிலைகள் டிராக்டர்கள் மூலம் ஏற்றப்பட்டு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பா.ஜனதா சிறுபான்மை ஒன்றிய செயலாளர் சகுபர் சாதிக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகக சென்று தெப்பக்குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன.



Next Story