இந்து முன்னணி சார்பில் 508 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை


இந்து முன்னணி சார்பில் 508 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
x

வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 508 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 508 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

508 சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் வேலூர் ரங்காபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்ட பொருளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர்கள் ஆதிமோகன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டத் தலைவர் மகேஷ் கலந்து கொண்டு விழா குறித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க 22 வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்த வேண்டும். சிலை வைக்க அனுமதி பல்வேறு துறைகளில் பெற வேண்டி உள்ளதால் பலர் சிரமத்தில் உள்ளனர். எனவே ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க வேண்டும். வேலூர் கோட்டத்தில் 23 இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் 1,008 இடங்களில் சிலை வைக்கப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 508 சிலைகள் வைக்கப்படுகிறது.

ஊர்வலம்

வேலூரில் செப்டம்பர் 2-ந் தேதி சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஊர்வலம் தொடங்குகிறது. இதில், மாநில செயலாளர் மனோகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம் காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, மெயின் பஜார், லாங்கு பஜார், கமிஷனரி ரோடு, கோட்டை சுற்றுச்சாலை வழியாக செல்கிறது. அதேபோல கொணவட்டத்திலும் இருந்து ஊர்வலம் செல்கிறது. சிலைகள் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு திருவிழாவில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விழாவில் ஏன்? அவர்கள் கலந்து கொள்ளக் கூடாது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்துகளை மையமாகக் கொண்டு ஊர்வலம் நடத்தப்படுகிறது. அதே போல இந்த ஆண்டு பிரிவினைவாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற கருத்தை முன்வைத்து ஊர்வலத்தை நடத்த உள்ளோம். கட்டுப்பாடுகளை தளர்த்தி விழா சிறப்பான முறையில் நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story