விநாயகர் சிலை ஊர்வலம்


விநாயகர் சிலை ஊர்வலம்
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சிலை ஊர்வலம்

ராமநாதபுரம்

தொண்டி

தொண்டி அருகே உள்ள சின்னத்தொண்டி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விநாயகர் சிலை ஊர்வல பொறுப்பாளர் ஐங்கரமூர்த்தி தலைமையில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொண்டி நகரின் முக்கிய வீதிகள் மகாசக்திபுரம், காந்தி நகர், புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பின்னர் தொண்டி புதுக்குடி கடலோர போலீஸ் நிலையம் அருகே தீர்த்த கரையில் விநாயகர் சிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவாடானை பா.ஜ.க. தெற்கு ஒன்றிய தலைவர் துரை முருகேசன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் பிஸ்மில்லாகான், விவசாய அணி துணைத்தலைவர் அஞ்சுகோட்டை ரமேஷ் ராஜா, மீனவர் பிரிவு மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story