அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல வேண்டும்


அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே  விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல வேண்டும்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே விநாயகர்சிலை ஊர்வலம் செல்ல வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே விநாயகர்சிலை ஊர்வலம் செல்ல வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில், விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் விநாயகர் சிலை நிறுவ உதவி கலெக்டரிடம் அனுமதி பெறுவது, சிலை வைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, சிலைகள் அதன் அடிப்பாகம் உள்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுகளை கண்டிப்பாக கடைபிடிப்பது, சிலைகள் நிறுவப்பட்ட அனைத்து இடங்களிலும் சரியான மின்விளக்கு மற்றும் ஜெனரேட்டர் ஏற்பாடுகள் செய்வது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட வழிகளில்

மேலும் உரிய அனுமதி பெறாமல் எக்காரணம் கொண்டும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கக் கூடாது, அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலை ஊர்வலம் செல்ல வேண்டும், ஊர்வலத்தில் சிலைகளை ஏற்றி செல்ல நான்கு சக்கர வாகனம் (மினி லாரி, டிராக்டர்) பயன்படுத்த வேண்டும், மூன்று சக்கர வாகனம், மாட்டு வண்டிகளை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை கரைப்பதற்கு முன்னர் நீர் மாசு ஏற்படாத வண்ணம் சிலைகளின் மேல் உள்ள பூக்கள், துணிகள், பிளாஸ்டிக் சம்மந்தமான பொருட்கள் போன்ற இதர பொருட்களை தனியாக நீக்க வேண்டும், என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா, முத்துகருப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராணிப்பேட்டை பிரபு, அரக்கோணம் பிரபு மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார், விழா அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.


Next Story