விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
சங்கடஹர சதுர்த்தியையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
சங்கடஹர சதுர்த்தியையொட்டி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில் நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டன.
இதே போல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதி சக்தி விநாயகர் கோவில் என பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.