டேட்டிங் செயலியில் பெண் பெயரில் சாட்டிங் செய்து பணம் பறித்த கும்பல் - 5 பேர் கைது


டேட்டிங் செயலியில் பெண் பெயரில் சாட்டிங் செய்து பணம் பறித்த கும்பல் - 5 பேர் கைது
x

டேட்டிங் செயலில் பெண் பெயரில் சாட்டிங் செய்து இளைஞரை மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தாமோதர கண்ணன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது செல்போனில் டேட்டிங் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் அகிலா என்ற பெண்ணுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் அவசர தேவையாக ரூ.500 கேட்டதன் பேரில் தாமோதர கண்ணன் அனுப்பி இருக்கிறார்.

இதன் பின்னர் திடீரென சைபர் கிரைம் போலீசில் இருந்து பேசுவதாக தாமோதர கண்ணனுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள், அகிலா தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு காரணமான தாமோதர கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக கூறி மிரட்டி, ரூ.13 ஆயிரம் வரை பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் ரூ.70 ஆயிரம் கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாமோதர கண்ணன் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் வியாசர்பாடியைச் சேர்ந்த லியோதுரை, சீனிவாசன் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் இந்த கும்பல் பெண்கள் பெயரில் டேட்டிங் செயலியில் பேசி, இளைஞர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.

மேலும் இந்த கும்பல் போலீஸ் என கூறி இன்னும் எத்தனை பேரிடம் இது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story