2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி

திருச்சியில் என்ஜினீயரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக பிரிஸ்டன் பத்ரி தெருவை சேர்ந்த முகில்குமார்(வயது 21) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் இவர் மீது 15 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதேபோல் திருச்சி ஏர்போர்ட் முல்லைநகர் சந்திப்பில் வெல்டிங் கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி ரூ.500 பறித்து சென்றதாக அதே பகுதியை சேர்ந்த இப்ராகிம்ஷாவை(25) ஏர்போர்ட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் இவர் மீது 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து முகில்குமார் மற்றும் இப்ராகிம்ஷா ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்ததால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதற்கான நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள முகில்குமார், இப்ராகிம்ஷா ஆகியோரிடம் வழங்கப்பட்டது.


Next Story