கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி அருகே கே.தெக்கூர் பகுதியை சேர்ந்தவர் மாங்குடி (வயது 42). இவரை கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. இது தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். இதில் கைதான சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த முத்துக்குமார் (22), முத்துப்பட்டினத்தை சேர்ந்த அனந்த் என்கிற முருகானந்தம் (20) ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமுவுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, அதற்கான நகலில் கையெழுத்து பெற்றனர். மேலும் 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.


Next Story