5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வேளாங்கண்ணி பைனான்சியர் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வெளிப்பாளையம்:
வேளாங்கண்ணி பைனான்சியர் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பைனான்சியர் கொலை
வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கை நல்லூரை சேர்ந்த பைனான்சியர் மனோகரன் என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சென்னை ஜோதி அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது25), சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அர்ஜூன் (26), சக்திவேல் (20), காசி (28),சுசீந்திரன்(24) ஆகிய 5 பேரை வேளாங்கண்ணி போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்த 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் படி 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை நாகை போலீசார், திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.