அரசியல் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


அரசியல் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

திருட்டு வழக்கில் கைதான அரசியல் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகரில் இரவு நேரங்களில் பூட்டப்பட்டுள்ள வீடுகளில் இருந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிய வழக்கில் டவுன் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 39) என்பவரை மேலப்பாளையம் குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர் ஒரு முக்கிய அரசியல் கட்சி பிரமுகராக செயல்பட்டு வந்தார்.

இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாநகர போலீஸ் கிழக்கு துணை கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

இந்த பரிந்துரையை ஏற்று மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று ஜெயக்குமாரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை மேலப்பாளையம் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.


Next Story