ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பல இடங்களில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த ஜனவரி மாதம் புலிவலம் அருகே சிறுகுடி கிராமத்தில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 15 டன் குருணையாக்கப்பட்ட ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் டிசம்பர் மாதம் 6-ந்தேதி தென்னூரில் 11 டன் ரேஷன் அரிசியும், 4 வாகனங்களையும் கைப்பற்றி 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த இரு வழக்கிலும் தலைமறைவாக இருந்த திருச்சி தென்னூரை சேர்ந்த பாபு என்ற சாதிக்பாட்ஷாவை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 13-ந்தேதி கைது செய்தனர். இந்தநிலையில் அவர் ஜாமீனில் வெளியே வந்தால் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவார் என்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் சாதிக்பாட்ஷாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மத்திய சிறையில் உள்ள சாதிக்பாட்ஷாவுக்கு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.மேலும் இது போன்ற ரேஷன் அரிசி கடத்தல் தொழிலை செய்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story