தொடர் கஞ்சா விற்பனை, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தொடர் கஞ்சா விற்பனை, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்த, அதே பகுதி அண்ணா நகரை சேர்ந்த மணி முருகன் மகன் தங்கத்தமிழனை (வயது 20) அரியலூர் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி சிறைச்சாலையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ரூ.18 ஆயிரத்து 700 மதிப்பிலான 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே தங்கத்தமிழன் மீது கஞ்சா விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ரமணசரஸ்வதி தங்கத்தமிழனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து புதுக்கோட்டை சிறையில் இருந்த தங்கத்தமிழன் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணை பிரதிகளை மத்திய சிறைத்துறையினருடன் போலீசாா் வழங்கினர்.