கஞ்சா வியாபாரிகள் கைது


கஞ்சா வியாபாரிகள் கைது
x

திசையன்விளையில் கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பெட்டைக்குளம் பஸ் நிலையம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் அரசால் தடைசெய்யப்பட்ட 750 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளிகூட மாணவர்களுக்கு விற்பனை செய்யகொண்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் பள்ளக்குறிச்சி புதூர் கிழக்கு தெருவை சேர்ந்த நிர்மல்ராஜ் மகன் ரோகித் அந்தோணி (வயது 19), தெற்கு உடை பிறப்பை சேர்ந்த ஜெயபாரத் மகன் கீர்த்திக் (வயது 21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story