கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனி பழைய பஸ் நிலைய கட்டண கழிப்பிடம் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டு இருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பட்டுக்கோட்டை கண்டிகன் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) என்பதும், தப்பி ஓடியது ஆண்டிப்பட்டி பூக்காரத்தெருவை சேர்ந்த ஹரிஹரசுதன் என்பதும் தெரியவந்தது. மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர் இந்த கஞ்சாவை அல்லிநகரத்தை சேர்ந்த கோபிநாத் என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்தார். அதன்பேரில், ஹரிஹரசுதன், கோபிநாத் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கோபிநாத்தை தேனி போலீசார் தேடி வந்த நிலையில் அவர் அல்லிநகரத்தில் கஞ்சா பொட்டலம் போட்டுக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story