கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்ப்ட்டார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கூறைநாடு ஆராயத்தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் கஞ்சா விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், மயிலாடுதுறை கூறைநாடு பஞ்சுக்காரத் தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 39) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story