பாலாற்றில் குப்பைக்கு தீ வைப்பு
பாலாற்றில் குப்பைக்கு தீ வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
வேலூர்
காட்பாடியில் இருந்து வேலூர் வரும் பாலாற்று பாலத்தின் கீழ் பலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் பழைய டயர்கள் உள்ளிட்ட குப்பைகளும் அங்கு ஏராளமாக கொட்டப்படுகிறது. இந்த நிலையில் அந்த குப்பைக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் மளமளவென குப்பைகள், டயர்கள் எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலம் உருவானது. இதனால் பாலத்தின் மேல் சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். பலர் முகத்தை மூடிக் கொண்டு சென்றனர். இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.
Related Tags :
Next Story